காதல் பருவங்கள்

பாலகம் பழகிய காலம் அது

ஒரு விரல் துணையாய்
தோள் பிடித்து இணையாய்
நடை பயின்ற நேரம் தெரிவிக்க வில்லை
தேவதை அவளென்று

பருவம் என்னை பயிர் செய்த காலம் அது

அன்றொரு நாள் அவசரமாய் தெளித்து விட்ட வாசலில்
அழகிய கோலம் ஒன்று அலங்கோலம் இடுவதை கண்டேன்
அலங்கோலம் என்றேன் சிணுங்கினாய் அழகிய கோலம் கண்ட திருப்தி

கனவுகள் பயின்ற காலம் அது

உறக்கம் மறுத்த காலமில்லை இது
உறக்கமே நீயான காலம்
உன்னை தவிர எதுவுமில்லை நினைவில்
அது  உறக்கம் தானே

எந்த சித்திரமும் உன்னை விட சிறப்பானதே
அவைகள் உன்னை போல ரசிக்க விடாமல்
 நொடிக்கொரு பாவம் மாறுவதில்லை

காதல் கண்ட காலம் அது

காதல் சொல்ல நெருங்கிய நேரம்
என்னை படித்து விட்ட கர்வம் உன்னில்
உன்னுடன் நானிருக்கிறேன் எனும்
உன் விழிகள் துணையோடு
காதல் சொல்லிட்டு உன்னை பார்க்க
விழிகள் சொன்னதையே வார்த்தைகளாக்கிய உன் இதழ்கள்
இயங்க மறந்த என் இதயத்தை இயக்கியது

Topic: காதல் பருவங்கள்

Date: 24/05/2012

By: Ashok

Subject: A small change

If you place a tamil mother and baby I think it would be look so good.Best wishes for your attempts....

Date: 06/10/2011

By: செல்வமுரளி

Subject: அது சரீஇ

அண்ணே, கலக்கறிங்க போங்க :)5

Date: 15/09/2011

By: செழியன்

Subject: ’கனத்த’ கவிதை:

மெய்யாலுமேவா....
இது உண்மைச் சம்பவமா...?
பின்றீங்க ரமேஷ்... அருமை...

New comment